BREAKING :அய்யோ பாவம்... பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !
பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. நீண்ட காலமாக சினிமாவில் இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த ‘பிளாக் பிரைடே’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’, ‘இந்தியாஸ் மோஸ்ட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபலமானவை.
வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர், ‘மிர்சபூர்’ என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபமானார். 65 வயதாகும் அவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென மரணமடைந்தார்.
இவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜித்தேந்திர சாஸ்திரியின் மரணம் திரைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.