ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக பிரபல நடிகை... ‘வார் 2’ புதிய அப்டேட்

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகும் ‘வார் 2’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வார்’. ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து டைகர் ஷெராஃப், சித்தார்த் ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெறும் 170 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 475 கோடி வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வார்‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாகவும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தை பாலிவுட் நடிகர் அயன் முகர்ஜி இயக்கவுள்ளார். யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் ஒரு நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு கதாநாயகிக்கான தேடல் நடைபெற்று வருகிறது.