திரைப்படமாகும் பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு..

gan

பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உருவாகிறது. 

இந்தியாவில் சாதனை புரியும் பிரபல விளையாட்டு வீரர், வீராங்கணைகளின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, முகமது அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெறுகின்றன. அதேபோன்று சில சாதனை வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இந்தியாவுக்காக கங்குலி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு இளம் கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கிய அவர், இந்திய அணியின் கேப்டனாக பெரிய உயரத்தை தொட்டுள்ளார். அதன்பிறகு லார்ட்ஸில் அவர் பெற்ற இமாலய வரலாற்று வெற்றி, இறுதியாக பி.சி.சி.ஐ.யின் தலைவரானது வரை அனைத்து இந்த படத்தில் இடம்பெற உள்ளது.  

இந்த படத்தில் கங்குலி கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 250 கோடி ரூபாயில்  உருவாகும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. தனது சுயசரிதை திரைப்படமாக உருவாவதை கங்குலியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story