போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் விவகாரங்களில் ஈடுபடுவதும் சர்ச்சையில் சிக்குவதும் தற்போது டிரென்ட் ஆகியுள்ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில் இருந்து தான் ஏறத்தாழ அனைத்து முக்கிய பாலிவுட் நட்சத்திரங்களும் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினர்.
அதிலும் முக்கியமாக நடிகை தீபிகா படுகோன்,சதா கபூர், சாரா அலி கான்,ரகுல் பிரீத் சிங் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் மூலம் 2017 ம் ஆண்டு நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் குழுவின் அட்மின் ஆக இருந்ததும், அதிர்ச்சிக்குரிய பல தகவல்களும் வெளியாகின.

போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பெரோஸ் நதியத்வாலாவின் மனைவி, ஷபானா சயித் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரின் வீட்டில் சோதனையிட்டபோது 10 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த செய்தி பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நதியத்வாலா பிரபல பாலிவுட் திரைப்படங்களான ‘வெல்கம்’, ‘பிர் ஹெரா ப்ஹெரி’ , ‘அவாரா பாகல் திவானா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story