இறுதியாக ஆர்யன் கானுக்கு கிடைத்த ஜாமீன்... கண்ணீருடன் மகனை வரவேற்ற ஷாருக் கான்!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாக மும்பை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கப்பலில் சோதனை செய்த போது ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எட்டு பேரை கைது செய்து மும்பை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆரியன் கானும் ஒருவர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். நீதிமன்ற காவல் முடிந்து ஜாமின் கோரி ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதையடுத்து "கைதுசெய்யும் போது ஆரியன் கான் கையிலிருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை" என்று தெரிவித்தார். ஆனால் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் மீண்டும் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில் 3 வது முறையாக ஜாமீன் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆர்யன் கானுக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவருடன் கைதுசெய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு காரணமாக நீண்ட நாட்கள் மன உளைச்சலில் இருந்த ஷாருக் கான், மகனை கண்ணீருடன் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.