திரைப்படமாகும் ‘கல்வான் பள்ளத்தாக்கு மோதல்’... பிரபல பாலிவுட் இயக்குனர் இயக்குகிறார் !
கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ராணுவ மோதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதனால் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன வீரர்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் வரை உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதல் சம்பவம் புத்தமாக வெளியானது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்கான உரிமையை பிரபல பாலிவுட் இயக்குனர் அபூர்வா லாகியா பெற்றுள்ள நிலையில், அவரே படத்தையும் இயக்கவுள்ளார். ஏற்கனவே ஏக் அஜ்னபி, மிஷன் இஸ்தான்புல், ஜன்ஜீர் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.