மவுனப்படத்தில் ‘விஜய் சேதுபதி’…. 33 ஆண்டுக்கு பிறகு உருவாகிறது ‘காந்தி டாக்ஸ்’
33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப்படமான காந்தி டாக்ஸ்-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
பன்முக திறமைக்கொண்டவராக நடிகர் விஜய் சேதுபதி திரையுலகில் வலம் வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். ஹூரோவோ, வில்லனோ, வயதான தோற்றமோ, திருநங்கை வேடமோ என எதை கொடுத்தாலும் சிறப்பாக நடித்து காட்டுபவர் விஜய் சேதுபதி.
இந்நிலையில் தனது கனவு படமான ‘காந்தி டாக்கீசை’ உருவாக்க பிரபல பாலிவுட் இயக்குனர் பாண்டுரங் முயற்சி வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். அதில் 19 ஆண்டுகளாக கடுமையாக போராடி இந்தப்படத்தின் கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இந்தப்படம் உணர்ச்சிகரமான மற்றும் என் இதயத்துக்கு நெருக்கமான படம். இதே உணர்வோடு உள்ள ஒரு நடிகரை பாலிவுட்டில் தேடி அலைந்தேன். பின்பு மொழிப்படங்களில் அவ்வாறு இருக்கும் நடிகரை தேடிதேன். ஒவ்வொரு இயக்குனரும் தாங்கள் எதிர்ப்பார்க்கும் குணாதிசயங்களுடன் தங்கள் நடிகர் இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர்.
அப்போது நான் தேடி கிடைத்த நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு, ஸ்டைல், குணாதிசயம், குரல் வளம் எல்லாம் வியக்கத்தக்க வகையில் இருந்ததது. இதனால் நான் தேடிய கதாநாயகன் இவர்தான் என்று உணர்ந்தேன். அதனால் எனது படத்தின் பணியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்து முடிக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது துக்ளக் தர்பார், மும்பைக்கார், அந்தாதுண் இயக்குனரின் படம் என பிசியாக இருப்பதால், இதையெல்லாம் முடித்தபிறகு இந்தப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.