சூரரைப் போற்று இந்தி ரீமேக் உருவாக இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!
சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் உருவாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து சில தினங்களுக்கு முன்பு சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதை சுதா கொங்காரா இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தி ரீமேக்கை அபாண்டியா நிறுவனத்துடன் இணைந்து சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் மூவரும் தயாரிக்கின்றனர்.
தமிழில் உருவான சூரரைப்போற்று படத்தை குணீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். தற்போது சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இல்லாமல் வேறொரு நிறுவனத்துடன் சூர்யா கூட்டணி வைத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை தயாரிக்க இருப்பதால் சிக்யா நிறுவனம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
“சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் 2 டி என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து சூரரைப் போற்று படத்தைத் தயாரித்தோம். எனவே இந்தி ரீமேக்கையும் நாங்கள் இணைந்து உருவாகியிருக்க வேண்டும். ஆனால் 2D என்டர்டெயின்மென்ட் சிக்யாவின் அனுமதியின்றி அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் உரிமைகளை விற்றுள்ளது. மற்றும் போட்ட ஒப்பந்தத்தை மீறியதால் வழக்கு பதிவு செய்தோம்" என்று சிக்கியா தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் உரிமைக்கும் தங்களுக்கு பங்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூரரைப் போற்று இந்தி ரீமேக் உருவாக இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.