மார்பக புற்றுநோய் நடுவே மற்றொரு நோயல் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

Hina khan
நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் ஹினா கான் மார்பக புற்றுநோயால் இறந்துவிட்டதாக பொய்யான வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில், நடிகை ஹினா கான் தனது மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு இடையே மியூகோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். Hina khanமேலும் அதற்கான தீர்வு அளிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது பதிவில், "கீமோதெரபியின் மற்றொரு பக்க விளைவு மியூகோசிடிஸ் ஆகும். இருப்பினும் அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். உங்களில் யாராவது அதை அனுபவித்திருந்தால் அல்லது ஏதேனும் பயனுள்ள வைத்தியம் தெரிந்திருந்தால் தயவுசெய்து பரிந்துரைக்கவும். நீங்கள் சாப்பிட முடியாதபோது மிகவும் கடினமாக உள்ளது. இது எனக்கு பெரிதும் உதவும்" என கூறியுள்ளார் .

Share this story

News Hub