‘ஸீபா’: தனது முதல் நாவலை வெளியிட்டார் ‘ஹூமா குரேஷி’!

photo

பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தனது முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.

photo

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி, இவர் தமிழில் பா.ரஞ்சித்- ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது படங்கள், வெப்தொடர்கள் என நடித்து அசத்தி வரும் ஹூமா எழுத்தாளராகவும் மாறியுள்ளார்.

photo

அதன்படி அவரது முதல் நாவலானஸீபா: ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர் ஹீரோ' நாவலை வெளியிட்டுள்ளார். புத்தகம் குறித்து கூறுகையில்இது ஒரு புனைகதை. 1992 முதல் 2019 வரை நடக்கும் கதை இது ஒரு ராஜ்யம் மற்றும் தீய ராஜா குறித்த கதை. இதை நான் கொரோனா காலத்தில் எழுத துவங்கினேன், நான் தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு உடற்பயிற்சி செய்துவிட்டு எழுத உட்காருவேன். இதை நான் வெப் தொடராக எடுக்க நினைத்தேன் ஆனால் நிச்சயமாக படமாகும். நான் ஒரு கலைஞன், எனது கலையை வெளிப்படுத்த எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை நான் எடுத்துக்கொள்வேன். அது நடிப்பாக இருந்தாலும் சரி எழுத்தாக இருந்தாலும் சரி, தயாரிப்பாக இருந்தாலும் சரி அனைத்தையும் பயன்படுத்துவேன்” என கூறியுள்ளார்.  

 

Share this story