சஞ்சய் தத் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன்… கங்கனா ரணாவத் பதிவு!
நடிகர் சஞ்சய் தத்தின் சமீபத்திய தோற்றத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்துவிட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 4-வது கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து மும்பையில் தன்னுடைய முதல் கட்ட சிகிச்சையை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் கடந்த மாதம் சஞ்சய் தத் புற்றுநோயிலிருந்து மீண்டார் என்று தெரிவிக்கபட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மிகவும் மெலிந்த போய் இருந்த சஞ்சய் தத்தின் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
தற்போது நடிகை கங்கனா ரணாவத் சஞ்சய் தத்தைச் சந்தித்துள்ளார். அவரது தற்போதைய தோற்றம் தன்னை ஆச்சர்யப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் நாங்கள் இருவரும் தங்கியிருப்பதை அறிந்ததும், நான் இன்று காலை சஞ்சு சாரை பார்க்கச் சென்றேன். அவர் உடல்நிலையில் முன்னேறி அவர் இன்னும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.உங்கள் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சஞ்சய் தத் “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் எல்லா அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. நன்றாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.