"முத்தக் காட்சியில் நடிக்க வற்புறுத்தப்பட்டேன்"… சமீரா ரெட்டி பகீர் தகவல்!
நடிகை சமீரா, ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த சமீரா 2008-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார்.
தன்னுடைய படங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட சமீரா “நான் நடித்த ஒரு படத்தில் எனக்கே தெரியாமல் எனக்கு ஒரு முத்தக்காட்சி இருந்தது. நான் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது திடிரென்று நீங்கள் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினர். நான் மறுத்த போது, தயாரிப்பாளர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏற்கனவே முசாஃபிர் படத்தில் முத்தக்காட்சியில் நடித்துள்ளீர்களே” என்றனர். நான் அந்தப் படத்தில் நடித்திருந்ததால் எனது எல்லா படத்திலும் அதை செய்வேன் என்று அர்த்தமல்ல.” என்றார். இதை நீங்கள் செய்யாவிட்டால் படத்திலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று இயக்குனர் கூறினார்” என்று சமீரா வெளிப்படுத்தினார்.
சமீரா ரெட்டி, முசாபீர் என்ற படத்தில் அனில் கபூருடன் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தார். அதை வைத்து மற்றொரு படத்தின் தயாரிப்பாளர்கள் அவரை முத்தக்காட்சியில் நடிக்காவிட்டால் படத்திலிருந்து நீக்கிவிடுவோம் என்று மிரட்டியதாக அதிர்ச்சித் தகவல் தெரிவித்தார்.