நான் ஒரு நாள்ல 16 கோடி சம்பாதிச்சிருந்தா, ரசிகர்கள்கிட்ட உதவி கேட்ருக்க மாட்டேன்… பிரபல பாலிவுட் நடிகர்!

நான் ஒரு நாள்ல 16 கோடி சம்பாதிச்சிருந்தா, ரசிகர்கள்கிட்ட உதவி கேட்ருக்க மாட்டேன்… பிரபல பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த குழந்தையின் மருத்துவத்திற்காக உதவ நினைந்த அவரை ரசிகர்கள் பலர் வெகுவாகப் பாராட்டினர். இருப்பினும் இரு சிலர் இதை அர்ஜுன் கபூர் விளம்பரத்திற்காகத் தான் செய்கிறார் என்று கூற ஆரம்பித்தனர்.

நான் ஒரு நாள்ல 16 கோடி சம்பாதிச்சிருந்தா, ரசிகர்கள்கிட்ட உதவி கேட்ருக்க மாட்டேன்… பிரபல பாலிவுட் நடிகர்!

அதில் ஒருவர் “சரி, உங்களின் ஒரு நாள் சம்பளம் இருந்தாலே அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றிவிடலாமே?” என்று தெரிவித்திருந்தார்.

அதைப் பார்த்த அர்ஜுன் அவருக்கு உடனே பதிலளித்தார். “நான் ஒரு நாளைக்கு 16 கோடி சம்பாதித்திருந்தால் இந்தப் பதிவை நிச்சயமாக வெளியிட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னால் ஒரு நாளில் 16 கோடி சம்பாதிக்க முடியாது என்பதால் அந்த சிறுவனுக்கு உதவுவதில் நான் எனது பங்கைச் செய்துள்ளேன். பின்னர் தான் இந்தப் பதிவை வெளியிட்டேன். நீங்களும் உதவி செய்யுங்கள். அவருக்கு உதவ ஒரு சாதகமான நடவடிக்கையை வழங்குங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொருவரும் அர்ஜுன் கபூர் இதை விளம்பரத்திற்காகத் தான் செய்கிறார் என்று தெரிவித்ததற்கு “நண்பரே, நீங்கள் என்னைப் பற்றி அறிந்திருந்தார் நான் இதை சிறுவனின் நலனுக்காகத் தான் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.” என்றும் பதிலளித்தார்.

Share this story