நல்ல செய்தி!..... குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘இலியானா டிகுரூஸ்’.

photo

பிரபல நடிகை இலியானா டிகுரூஸ் தான் தாய்மையடைந்த விஷயத்தை சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

photo

தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கே’ படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவர் போட்ட பெல்லி நடனம் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்தது. அடுத்து அவர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

photo

சமூகவலைதளத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இலியானா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஆனால 2019ஆம் ஆண்டு அதனை முறித்துக்கொண்டார். தற்போது ஹிந்தி நடிகையான காத்ரினா கைப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவரைக் காதலித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் அவர் தனது சமூகவலைதலத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

photo

பதிவில் அவர் கூறியதாவது, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட குழந்தையிம் உடையயோடு விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், குழந்தையின் தந்தை குறித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

Share this story