விரைவில் தொடங்கும் கங்குலியின் பயோபிக் படம்.. சிறப்புத் தோற்றத்தில் தோனி !

sourav ganguly

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்தவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் கேப்டனாக பெரிய உயரங்களை தொட்டவர். சமீபத்தில் பி.சி.சி.ஐயின் தலைவரான அவர், இந்திய அணியை திறம்பட வழி நடத்தி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.   

sourav ganguly

கிரிக்கெட்டின் ஜாம்பவனாக விளங்கிய அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் தான் நடிக்கவேண்டும் என்று கங்குலி விருப்பம் தெரிவித்தனர். 

sourav ganguly

சினிமாவில் பிசியாக நடித்து வந்த ரன்வீர் கபூர், தற்போது கங்குலி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story