'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கை தானே இயக்கும் ஹீரோ... நரேன் கதாபாத்திரத்தில் முக்கிய நடிகை!

kaithi hindi

'கைதி' படத்தின் இந்தி ரீமேக் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட அந்த ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல் ரொமான்ஸ் இல்லாமலும் நல்ல கதை மட்டுமே வைத்து படம் வெற்றியடைய  முடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்தது 'கைதி'.

ajay-devgn-343

தற்போது கைதி  இந்தியில் ரீமேக் இருப்பதாக பல மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியானது. பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை  ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்கின்றனர். நடிகை தபுவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

kaithi hindi

தற்போது கைதி படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் தேவ்கனே இயக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இது அவர் இயக்கும் 4-வது படமாகும். மேலும் கைதி படத்தில் நரேன் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் நடிகை தபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

படத்திற்கு 'போலா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story