இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கார் விழாவில் மரியாதை!
இன்று ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த விருதுகள் பட்டியலும் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் மறைந்த திரைத்துறை கலைஞர்களுக்கு மரியாதை செய்வது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் 2020-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதில் இந்திய நடிகர் இர்பான் கானுக்கு மரியாதை செய்யப் பட்டது. இந்திய நடிகரான இர்பான் கான் ஸ்பைடர் மேன், ஜுராசிக் வேர்ல்டு, லைஃப் ஆப் பை ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பானு அதையாவுக்கும் மரியாதை செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு காந்தி திரைப்படத்திற்கான சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர்களான சாட்விக் போஸ்மேன், இயன் ஹோல்ம், சீன் கோனரி மேக்ஸ் வான் சிடோ, கிறிஸ்டோபர் பிளம்மர் உள்ளிட்டோருக்கும் மரியாதை செய்யப்பட்டது.