முகமது சிராஜுடன் பாலிவுட் நடிகை டேட்டிங் ? நடிகையின் தாய் விளக்கம்...!

siraj

பிரபல பாலிவுட் நடிகை மஹிரா ஷர்மா. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 13-ல் பங்கேற்ற இவர் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டேட்டிங் செய்வதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுபற்றி இருதரப்பும் எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தனர். இந்த நிலையில், முகமது சிராஜுடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல்களுக்கு மஹிரா ஷர்மாவின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.

siraj

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மஹிரா ஷர்மா மற்றும் முகமது சிராஜ் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. என் மகள் பிரபலமாக இருப்பதால் அவள் பெயரை இப்படி தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரிவித்தார். சமீபத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆஷா போஸ்லேவின் பேத்தி சனாய் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த தகவல்களை பொய் என்று சனாய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story