மகளாக நடித்தவரைத் திருமணம் செய்யும் அமீர் கான்!?

aamirk-han-2

நடிகர் ஆமீர் கான் தற்போது நடிகை பாத்திமா சனா ஷைக்கை காதலிப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தனது மனைவி கிரண் ராவ் உடனான விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதையடுத்து நெட்டிசன்கள் அமீர்கானை நடிகை பாத்திமாவுடன் சேர்த்து வைத்து பேசத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தரப்பில்இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.

ஆமீர் கான் மற்றும் பாத்திமா இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. எனவே விரைவில் அவர்கள் இது குறித்து அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் கான் பாத்திமாவைக் காதலித்ததால் தான் அவருக்கும் மனைவி கிரணுக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆமிர் கானுக்கு வயது 56. நடிகை பாத்திமாவுக்கு வயது 28 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் நடிகை பாத்திமா சனா ஆமீர் கானின் மகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story