பிங்க் கோழிகுஞ்சாக மாறிய 'ஜான்வி கபூர்' – வெளியான கியூட் வீடியோ.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் மற்றும் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்விகபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கோலிவுட்டில் நடிக்க சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் லிங்குசாமி இயக்க உள்ள, ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் நடிப்பது தவிர சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி, மாலத்திவிற்கு சுற்றுலா சென்று பிகினி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிங்க் நிற உடையில் கோழிகுஞ்சுபோல நடனமாடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் செம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து ஹார்ட் எமோஜிகளை வாரி குவித்து வருகின்றனர்.