கமல் படத்தின் காப்பியா 'ஜவான்' ?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அட்லி !

jawaan

'ஜவான்' படத்தின் கதை கமலின் சூப்பர் ஹிட் படத்தின் கதை என்று சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

jawaan

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

jawaan

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் விஜயகாந்தின் 'பேரரசு' படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் அட்லி மீண்டும் கதை சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி பாரதிராஜா இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த 'ஒரு கைதியின் டைரி' படத்தின் கதையை தான் ஜவான் படமாக அட்லி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கதையை தற்போது மெருகேற்றி ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ‌ 

 

Share this story