வெற்றிக்கு தயார்!- இது ‘ஜவான்’ கூட்டணி.

photo

அட்லீ இயக்கத்தில்  ஷாருக்கான் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’. அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம் இது என்பதாலும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது படத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் கேரக்டருக்கான லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


 

‘The Dealer….. of DEATH” என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ளது. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் சுமார் 200 கோடி மேல் பட்ஜெட்டில் தயாராகி தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்து வசூலில் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.

 

Share this story