சென்னையில் புதிய டிரைலரை வெளியிடும் ‘ஜவான்’ படக்குழு- முன்னணி நடிகர் பங்கேற்பு.

ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். பல சூப்பர் ஹிட் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் ஜவான் படத்தின் மூலமாக நயன்தாரா எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவருடன் இணைந்து யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி, நடிகை தீபிகா படுகோன் (சிறப்பு தோற்றத்தில்) நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுவும் அந்த டிரைலர் சென்னையில் வெளியிடப்பட உள்ளதாம். அந்த டிரைலரில் ஷாருக்கானின் பிளாஸ்பேக் காட்சி இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும் படத்திலிருந்து இரண்டு பாடலகள் வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் பங்கேற்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.ஹாருக்கான், விஜய் இடையே சிறப்பான நட்பு உள்ளது நாம் அறிந்த ஒன்று, அதனால் விஜய்யின் வருகையை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.