யம்மாடியோவ்…… இவ்வளவு கலெக்ஷனா!- அசர வைக்கும் ‘ஜவான்’ முதல் நாள் வசூல்.

photo

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

photo

இந்த ஆண்டு ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ‘பதான் ‘ படம் பிளாக் பஸ்டர் வெற்றியால் ‘ஜவான் ‘ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக அட்லீ, நயன்தாரா மற்றும் அனிருத்துக்கு பாலிவுட்டில் இது முதல் படம். படத்தில் யோகிபாபு, பிரியாமணி, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலரும் நடித்த ‘ஜவான்’, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்லவிமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் படம் எவ்வளவு முதல்நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி படம் உலக அளவில் முதல் நாளில், ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ 75 கோடி வசூல் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் முதல் நாள் வசூலாக படம் ரூ.5 கோடியை பெறுள்ளது. ஒரு பாலிவுட் நடிகரின் படம் முதல் நாளில் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியுள்ளது இதுவே ஆகும். இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

Share this story