அட்வான்ஸ் புக்கிங்கில் அலறவிடும் ‘ஜவான்’- இத்தனை கோடியா!

photo

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜவான்’. படம் நாளை மறுநாள் தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் படு ஜோராக நடந்து வருகிறது. அதன் மூலமாக எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி பலரையும் மிரள  வைத்துள்ளது.

photo

அனிருத் இசையமைக்கும் ஜவான் படத்தில் யோகிபாபு, பிரியாமணி, பிரியங்கா சோப்ரா, விஜய் சேதுபதி என முன்னணி நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். நயன்தாராவுக்கு இது முதல் பாலிவுட் படம். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தகவல் வெளியாகியுள்ளது அதன்படி படம் முதல்நாள் புக்கிங்கில் உலக அளவில் 21 கோடி வசூலித்துள்ளதாம். இதே வேகத்தில் சென்றால் 7ஆம் தேதி படம் வெளியாவதற்குள் 40 கோடியை அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் எட்டிவிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

photo

இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ வசூலில் பட்டையை கிளப்பிய நிலையில், ‘ஜவான்’ படம் அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story