‘ஹயோடா’ ரொமான்டிக் வீடியோ பாடல் வெளியீடு.

photo

ஷாருக்கான் , நயன்தாரா இணைந்து ஆடியுள்ள ‘ஹயோடா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

photo

ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘ஜவான்’. ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, பிரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான  'ஹையோடா' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ரொமான்ஸ் நிரம்பி வழியும் இந்த பாடலை அனிருத் மற்றும் பிரியா மாலி இணைந்து பாடியுள்ளனர். பிரபல நடன இயக்குனர் ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார்.

Share this story