மீண்டும் தொடங்கியது ‘ஜவான்’ படப்பிடிப்பு.. குடும்பத்துடன் மும்பையில் முகாமிட்டுள்ள அட்லி !

jawan

ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. 

பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கானின் அடுத்த படமான ‘ஜவான்’ பக்கம் ரசிகர்கள் பார்வை திரும்பி வருகிறது. இந்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். 

jawan

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் அட்லிக்கு குழந்தை பிறந்த நிலையிலும் படப்பிடிப்பு குடும்பத்துடன் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார். இதில் ஷாருக்கானின் சண்டைக் காட்சிகள் 6 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட அட்லி திட்டமிட்டுள்ளார். 

Share this story