என்னப்பா இப்படி மிரட்டராரு.. ஜவானில் விஜய் சேதுபதி லுக் வெளியீடு !

jawan

‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜவான்’. சுமார் 250 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

jawan

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. அனிரூத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. 

jawan

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மிரட்டலான லுக்கில் இருக்கும் அந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story