ப்ரோமோ ஷூட்டுக்காக மும்பை சென்ற விஜய் சேதுபதி.. ‘ஜவான்’ புதிய அப்டேட் !

vijay sethupathy

‘ஜவான்’ படத்தின் ப்ரோமோ ஷூட்டுக்காக நடிகர் விஜய் சேதுபதி மும்பையில் முகாமிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை தமிழின் முன்னணி இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

jawan

இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிரூத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் ‘ஜவான்’ படத்தின் ப்ரோமோஷூட் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சேதுபதி மும்பைக்கு சென்றுள்ள நிலையில் அங்கேயே முகாமிட்டுள்ளார். அந்த ப்ரோமோஷூட்டில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் விஜய் சேதுபதியின் கிளிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் வெளியாகும் என தெரிகிறது. 

 

Share this story