இந்தியில் ரீமேக்காகும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ – வெளியான சூப்பர் தகவல்.

photo

மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஹே’. இயக்குநர் விவின் தாஸே இயக்ககியிருந்தார். இவர் நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார்.இந்த படத்தில் பாசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்தார். இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை பெற்றனர்.

photo

மனைவியை அடிக்கும் கணவன், என வழக்கமான கதைகளத்தில் நகரும் இந்தபடம், அப்படி இருக்கும் ஆண் ஒருவனை அவனது மனைவி திருப்பி அடித்தால் என்னவாகும் என காட்டியுள்ளனர் இந்த படத்தில், அதுவும் அழுகாச்சியாக இல்லாமல், நகைச்சுவையுடன் இந்த படத்தின் கதை இருக்கும். 

photo

ரசிகர்களிடன் பேராதரவை பெற்ற இந்த படம், தற்போது இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய விபின் தாஸ்தான் இந்தியிலும் இயக்குகிறார். அமீர்கான் தயாரிக்கும் இந்த படத்தில் ஃபாத்திமாசனா ஷேக் நடிக்கவுள்ளார். மலையாளமொழியில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்த படம் இந்தியில் ரசிகர்களின் ரசனையோடு ஒத்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

photo

Share this story