பிரபாஸ் படத்தை அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

பிரபாஸ் படத்தை அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

சன்யா மல்ஹோத்ரா மற்றும் அபிமன்யு தஸ்ஸனி ஆகியோர் நடிப்பில் ‘மீனாட்சி சுந்தரேஷ்வர்’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

சன்யா மல்ஹோத்ரா அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அமீர் கானின் இரண்டாவது மகளாக நடித்து பிரபலமானவர.

பிரபாஸ் படத்தை அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

இவர் கடைசியாக ‘லுடோ’ படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் படமாக இருந்தாலும் இப்படத்தின் கதை தமிழ்நாட்டின் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. ரொமான்ஸ் காமெடி ஜேர்னரில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை விவேக் சோனி இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது.

இப்படத்தை தர்மடிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கின்றனர். தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

பிரபாஸ் படத்தை அடுத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

ஜஸ்டின் பிரபாகரன் விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல படங்களுக்கு இசையமைத்த இவர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராதே ஷியாம்’ படத்தில் இணைந்தார்.

இவ்வாறு ஜஸ்டின் பிரபாகரன் இந்தியா முழுதும் தன் கால் தடத்தைப் பதித்து வருகிறார்.

Share this story