அரசியலில் குதிக்க தயாரான நடிகை கங்கனா?

photo

கங்கனா ரணாவத் நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி2 படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. தொடர்ந்து இந்தியில் ‘தேஜஸ்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் முறையாக இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்குவதாற்காக 3 பெண் விமானிகளை நியமிக்கப்பட்டனர். அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படமும் சரியாக ஓடவில்லை, முதல் நாளிலிருந்தே படம் சரிவை சந்தித்ததால் பல தியேட்டரில்  இருந்து படத்தை தூக்கிவிட்டனர்.

photo

இந்த நிலையில் அமைதி வேண்டி துவாரகதீசர் கோவிலுக்கு செல்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கங்கனா. இந்த நிலையில் துவாரகையில் வழிபாடு நடத்திய கங்கனாவிடம் மக்களவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்” கடவுள் கிருஷணர் ஆசிர்வதித்தால் போட்டியிடுவேன்” என பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் “ 600 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத சாதனையை பாஜக அயோத்தியில் ராமரை வழிபட வைத்து செய்துவிட்டது” என கூறியுள்ளார்.

photo

Share this story