'பாலின அடிப்படையில் அடையாளப்படுத்தாதீங்க'……- கங்கனாவின் பளிச் பதிவு.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா சினிமா, அரசியல் என தனது கருத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல், தயக்கமில்லாமல் ஓப்பனாக வெளிப்படுத்துவார். இதனால் அவர் பல சர்சைகளை சந்தித்திருந்தாலும் அதை செய்யாமல் இருந்ததில்லை. அந்த வகையில் தற்போது அடையாளப்படுத்துவது குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கங்கனா ரனாவத் பதிவில் கூறியதாவது, “ஒரு நபரை நாம் எப்போதுமே ஆண், பெண், திருநங்கை என்று பாலின அடிப்படையில் பார்க்கக்கூடாது. இந்த வளர்ச்சியடைந்த உலகில் இப்போதெல்லாம் பெண் நடிகைகள் அல்லது பெண் இயக்குநர்கள் போன்ற வார்த்தைகளைப் யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக நடிகர்கள், இயக்குநர்கள் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர். அப்படி நான் என்னை பெண் என அடையாளப்படுத்தியிருந்தால் இந்த திரையுலகத்தில் எனக்கான இடத்தை உருவாகியிருக்க முடியாது. அதனால் நீங்கள் உங்களை அதிலிருந்து விடுவித்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
Whether you are a man/woman/ anything else your gender is of no consequence to anyone but you, please understand. In Modern world we don't even use words like actresses or female directors we call them actors and directors. What you do in the world is your identity, not what you…
— Kangana Ranaut (@KanganaTeam) April 28, 2023
கங்கனா தற்போது தமிழில் ‘சந்திரமுகி2’ படத்தில் ரகவாலாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சந்திரமுகியாக நடிப்பதாகவும், வேட்டையனுக்கும், சந்திரமுகிக்கும் இடையிலான காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.