நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கங்கனா!...

photo

சர்ச்சை நடிகை கங்கனா ரனாவத், வரும் நாடாலுமற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

பாலிவுட் நடிகையான கங்கனா போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க கூடியவர். அது அவரது நிஜ வாழ்க்கையிலும் அநேக இடங்களில் பிரதிபலிக்கும் அதனாலேயே சர்ச்சை நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக அரசியல் குறித்து இவர் பதிவிடும் கருத்துகள் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகவும் ஆவதுண்டு. இந்த நிலையில் கங்கனா அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது, அதற்கேற்றார்போல கடந்த சில ஆண்டுகளாக கங்கனா நடிக்கும் படங்கள் சரியாக ஓடாமல் இருப்பதால் அவர் முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளாராம். கங்கனா வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட உள்ளதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

Share this story