சீதையின் கதாபாத்திரத்தில் கரீனாவுக்குப் பதில் கங்கனா ரனாவத்!

kangana-an-kareena

கடவுள் சீதையைப் பற்றி உருவாகவிருக்கும் வரலாற்றுப் படத்தில் நடிகை கரீனா கபூருக்குப் பதிலாக கங்கானா ரணாவத் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ராமாயணக் கதையை சீதையின் பார்வையில் இருந்து எடுத்துக் கூறுமாறு உருவாகவிருக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா ரூ.12 கோடி சம்பளமாக கேட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக கரீனா தான் நடிக்கும் படங்களில் 6 முதல் 8 கோடி தான் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க 12 கோடி கேட்டுள்ளது பலரைக் கோபமடையச் செய்துள்ளது. இந்துக் கடவுளைப் பற்றி எடுக்கப்படும் படத்தில் நடிக்க அதிக தொகை கேட்டு இந்து மக்களின் மனதைப் புண்படுத்தியாக கரீனா மீது பலர் புகார் எழுப்பினர். 

தற்போது சீதா கதாபாத்திரதத்தில் நடிக்க கங்கானாவின் பெயரை விஜயேந்திர பிரசாத் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீதா படத்தின் கதையை இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான் எழுதியுள்ளார் .

விஜயேந்திர பிரசாத் கரீனாவுக்கு முன்னரே சீதை கதாபாத்திரத்திற்கு கங்கனா பெயரை பரிந்துரைத்துள்ளார். 'தலைவி' படத்தில் நடிக்க கங்கனா பெயரைப் பரிந்துரைத்ததும் கங்கனா தான். தற்போது கரீனாவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் விரைவில் கங்கனா இந்தப் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story