"பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் சுத்தமானது"... 'தி காஷ்மீர் பைல்ஸ்' குறித்து நடிகை கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா ரனாவத் 'தி காஸ்மீர் பைல்ஸ்' படத்தை பார்த்த பின்னர் பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் சுத்தமானது என்று தெரிவித்துள்ளார்.
1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப் படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். படத்திற்கு நாடு முழுதுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல மாநில அரசுகளும் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்து வருகின்றனர். மோடி முதல் சுரேஷ் ரெய்னா வரை பலரும் இந்தப் படத்தை பாராட்டி பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தி காஸ்மீர் பைல்ஸ் படத்தை புகழ்ந்துள்ளார்.
“பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் முழுவதையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சுத்தம் செய்துள்ளது. அபத்தமான திரைப்படங்களை உருவாக்கி அதை புரொமோஷன் செய்யும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் இந்தப் படத்தை புரொமோட் செய்ய வேண்டும்.
இந்த படம் பல வழக்கங்களை உடைத்து வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பிறகு திரையரங்கம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் தான் என்ற கண்ணோட்டத்தை இது தகர்த்துள்ளது "என்று கங்கனா தெரிவித்துள்ளார்.