"போதைப்பொருள் தடுப்பு போலீஸார் சினிமாவில் நுழைந்தால் பலர் ஜெயிலில் இருப்பார்கள்"… கங்கனா கிளம்பும் சர்ச்சை!

"போதைப்பொருள் தடுப்பு போலீஸார் சினிமாவில் நுழைந்தால் பலர் ஜெயிலில் இருப்பார்கள்"… கங்கனா கிளம்பும் சர்ச்சை!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுஷாந்த் இறப்பிற்காக நீதி கேட்டு அவர் போராடி வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சுஷாந்த் மறைவிற்காக பல பாலிவுட் பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகிறார்.
"போதைப்பொருள் தடுப்பு போலீஸார் சினிமாவில் நுழைந்தால் பலர் ஜெயிலில் இருப்பார்கள்"… கங்கனா கிளம்பும் சர்ச்சை!
தற்போது கங்கனா பாலிவுட்டில் நடந்து வரும் போதைப்பொருள் மாஃபியா குறித்தும் சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கங்கனா வெளியிட்டுள்ள பதிவுகளில்
”திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன்தான், இது கிட்டத்தட்ட எல்லா வீட்டு விருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது, ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் உயர்ந்த மற்றும் செல்வாக்கான வீடுகளுக்குச் செல்லும் போது இலவசமாக வழங்கப்படுகிறது, எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்படுகின்றன மற்றும் சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அதைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.


போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு தேவை, நான் எனது வாழ்க்கையை மட்டுமல்ல, என் உயிரையும் பணயம் வைத்துள்ளேன், சுஷாந்த்துக்கு இந்த ரகசியங்கள் தெரிந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார்.


நான் மைனர் பெண்ணாக இருந்தபோது என்னுடைய வழிகாட்டியாக இருந்த ஒருவர் என்னுடைய குளிர்பானங்களில் போதைப் பொருளை எனக்குத் தெரியாமல் கலந்து கொடுத்துவிடுவார். ஆனால், நான் பிரபலமானதும் பெரிய படங்களின் பார்ட்டிகளுக்குச் சென்றபோது அங்கு ஒரு போதைப்பொருள் மற்றும் மாஃபியா உலகம் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்”. என்று கங்கனா தெரிவித்துள்ளார்.


மேலும், போதைப்பொருள் தடுப்பு போலீஸார்  நுழைந்தால் பெரும் பிரபலங்கள் பலர் தற்போது சிறையில் இருப்பர். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும். பாலிவுட் என்ற சாக்கடையைத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன்.

Share this story