“இந்தியத் திரை வரலாற்றிலே இதைச் செய்த முதல் பெண் நான் தான்”… கங்கனா பெருமிதம்!
இந்தியத் திரையுலகில் இதைச் செய்த முதல் பெண் நான்தான் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தலைவி’யில் நடித்து வருகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையினை 20 கிலோ ஏற்றி நடித்துள்ளார் கங்கனா. தற்போது தலைவி படத்தின் படப்புப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. அதனால் தற்போது கடின உடற்பயிற்சியின் மூலம் தனது பழைய உடல் எடைக்கு மாறியுள்ளார்.
இதற்காகத் தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா “இந்தியத் திரைத்துறையில் இதைச் செய்த முதல் பெண் நான் தான். இதற்காக என் உடலுக்கு நன்றி, என் உடல் அழகாகக் காட்சியளிக்கும் ஒரு அரிய கலவையாகும், எனது 30 வயதில் தலைவி படத்திற்காக பரதநாட்டியம் பயில நான் 20 எடை கூட வேண்டியிருந்தது. அது என் முதுகை கடுமையாகச் சேதமடையச் செய்தது. ஆனால் அதைவிட என்னுடைய பங்கை திருப்தியாகச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.” என்று தெரிவித்துள்ளார்.