கங்கனாவுக்கு குவியும் ஆக்ஷன் படங்கள்… வெறித்தனமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபாடு!

கங்கனாவுக்கு குவியும் ஆக்ஷன் படங்கள்… வெறித்தனமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபாடு!

நடிகை கங்கனா ரணாவத் தான் நடிக்க இருக்கும் இரண்டு ஆக்ஷன் படங்களுக்காக தீவிர சண்டைப் பயிற்சியில் இறங்கியுள்ளார்.

வெறித்தனமாக சண்டைப்பயிற்சி செய்யும் வீடியோவை கங்கனா தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கிக் பயிற்சி, ஜிம்னாஸ்டிக் மற்றும் சில கடின உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இயற்கை எழிலுடன் கூடிய தனது வீட்டிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்த்து வருகிறார் கங்கனா.

கங்கனாவுக்கு குவியும் ஆக்ஷன் படங்கள்… வெறித்தனமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபாடு!

தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் நடிக்கும் இரு ஆக்ஷன் படங்களான ‘தேஜஸ்’ மற்றும் ‘தக்காட்’ ஆகியவற்றிற்கான செயல்பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். இந்தப் படங்களில் விமானி மற்றும் உளவாளி கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். பாலிவுட் எனக்கு நிறைய ஆக்ஷன் படங்கள் கொடுத்திருக்கலாம், ஆனால் மணிகர்னிகா வெற்றிக்குப் பிறகு நானும் பாலிவுட்டுக்கு அதன் முதல் முறையான ஆக்ஷன் ஹீரோயினைக் கொடுத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Dhaakad (2020) - Review, Star Cast, News, Photos | Cinestaan


சர்வேஷ் மேவாரா இயக்கும் ‘தேஜாஸ்’ படத்தில் கங்கனா இந்திய விமானப்படை விமானியாக நடிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. தக்காட்’ மற்றும் ‘தேஜஸ்’ படங்களுக்கு முன்பு, கங்கனா ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.எல் விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Share this story