கங்கனா ரணாவத்தின் தேஜஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

கங்கனா ரணாவத்தின் தேஜஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். 2016 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப் படை போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. இத்திரைப்படம் கடந்த 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் வசூலில் சரிவைச் சந்தித்தது. பல திரையரங்குகளில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

கங்கனா ரணாவத்தின் தேஜஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

இந்நிலையில், தேஜஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஜீ5 தளத்தில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story