இனவெறி காரணமாகத் தான் இது நடந்தது… ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து கண்கலங்கிய கங்கனா!
நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்த உணர்வுகளை கண் கலங்க வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய பதிவுகள் மட்டுமே வெளியிட்டு வந்தார். சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சாடி கங்கனா வெளியிட்ட ட்வீட்கள் விதிமீறல் செய்ததாகக் கூறி அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கங்கனா தனது ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது குறித்து கண் கலங்க வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
“ட்விட்டர் எனது கணக்கை முடக்கியது மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்பதை மட்டுமே நிரூபித்துள்ளதுனர், பிறப்பால், ஒரு வெள்ளை நபர் ஒரு பழுப்பு நிற நபரை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள். நாம் என்ன நினைக்க வேண்டும், பேச வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். எனது கருத்துக்களை வெளிப்படுத்த எனக்கு ஏகப்பட்ட தளங்கள் உள்ளன. ஏன் சினிமாவில் கூட நான் கருத்துக்களை வெளிப்படுத்துவேன்.” என்று தெரிவித்துள்ளார்.