யாருக்கு வேணும் உங்க சிறந்த நடிகை விருது... ஃபிலிம்பேர் அமைப்பு மீது வழக்கு தொடுக்கும் கங்கனா ரணாவத்!
சிறந்த நடிகைக்கான விருது கொடுக்க இருப்பதாக அழைப்பு விடுத்த பிலிம்பேர் விருது விழா மீது வாழைக்கு தொடுக்க இருப்பதாக நடிக கங்கனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும் சர்ச்சை நடிகை யார் என்று கேட்டால் அனைவரும் முதலில் சொல்லும் பெயர் கங்கனா ரணாவத். அவர் எது பேசினாலும் சர்ச்சையாகிவிடும். எனவே அவர் பல தளங்களில் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் 67-வது பிலிம்பேர் விழாவில் கங்னவுக்கு சிறந்த நடிகைக்கான விருதில் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். எனவே அது தொடர்பான அவருக்கு பிலிம்பேர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பிலிம்பேர் விருது அமைப்பு மீது வழக்கு தொடுக்கப் போவதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “கடந்த 2014 முதல் வரம்பற்ற ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி வரும் பிலிம்பேர் விருதுகள் போன்றவற்றை நான் தவிர்த்து வருகிறேன். இருந்தாலும் அவர்களது விருது விழாவில் பங்கேற்கும் படி எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. இந்த முறை தலைவி படத்திற்காக எனக்கு சிறந்த நடிகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்னை அவர்கள் இன்னும் பரிந்துரைத்து வருவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது. அதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளேன். என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த குற்றச்சாட்டை அறிந்து தற்போது சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் இருந்து கங்கனாவின் பெயரை நீக்கியுள்ளதாக பிலிம்பேர் அமைப்பு தெரிவித்துள்ளது.

