இந்திராகாந்தியாக நடித்துள்ள கங்கனா... ‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Emergency

 கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கம்பீரமிக்க பிரதமர்களில் ஒருவரான இருந்தவர் இந்திராகாந்த்தி. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உருவாகி வருகிறது. அதிலும் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் முக்கியமானது அவர் கொண்டு வந்த ‘எமர்ஜென்சி’ சட்டம். அதை வைத்துதான் இந்த படத்தின் கதையே உருவாகியுள்ளது.

Emergency  

இந்த படத்தில் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா நடித்துள்ளார். அதோடு இந்த படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.  இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ரித்தேஷ் ஷா கவனித்துள்ளார்.கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Emergency

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 24-ஆம் தேதி இப்படம் வெளியிடப்படுகிறது. இதையொட்டி மோஷன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 


 

null


 

null


 

Share this story