‘தேஜஸ்’ படத்திற்காக விமானப் பயிற்சித் தயாரான கங்கனா!
நடிகை கங்கனா தான் நடிக்கும் ‘தேஜஸ்’ படத்திற்காக விமானப் பயிற்சியை வகுப்புகளைத் தொடங்கியுள்ளார்.
கங்கனா ரணாவத் ஏஎல் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ‘தேஜஸ்’ மற்றும் ‘தக்காட்’ என இரு ஆக்ஷன் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தேஜஸ் படத்தில் விமானியாகவும், தக்காட் படத்தில் உளவாளியாகவும் நடிக்கிறார்.
இந்தப் படங்களுக்காக கிக் பயிற்சி, ஜிம்னாஸ்டிக் மற்றும் சில கடின உடற்பயிற்சிகளையும் கங்கனா மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட கங்கனா “இன்று தேஜஸ் படக்குழுவினருடன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளேன். மிகவும் திறமையான இயக்குனர் சர்வேஷ் மேவாராவுடன் பணியைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பயிற்சியாளர் விங் கமாண்டர் அபிஜீத் கோகலேவுடன்” என்று தெரிவித்துள்ளார்.
சர்வேஷ் மேவரா இயக்கும் ‘தேஜஸ்’ திரைப்படம் இந்திய விமானப் படையில் முதன் முறையாக இணைந்த மூன்று பெண்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.