கர்ப்பகாலத்திலும் பளபளவென இருக்கும் கரீனா கபூர் !
பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைரமூர் அலி கான் என்கிற மகன் இருக்கிறார். கரீனா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் இருந்து விடுப்பில் இருக்கும் கரீனா தனது ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். கர்ப்பகாலத்தில் பெண்கள் பொதுவாக கூடுதல் எடையுடன் பொலிவிழந்து சோர்வாக காணப்படுவர்.
ஆனால் நடிகை கரீனா எந்தவித மாற்றமுமின்றி கூடுதல் அழகுடன் காணப்படுகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் மூத்தமகன் தைமூர் அலிகானுடன் அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து வந்த கரீனா சமீபத்தில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் கரீனா மிகவும் அழகான உடையில் நீல நிற காலணிகளுடன் இருக்கிறார்.இந்த புகைப்படங்கள் மிகுந்த வரவேற்பைப்பெற்று வருகிறது.