சீதாவின் பார்வையில் உருவாகும் ராமாயணக் கதை… கரீனா வைத்த இரண்டு நிபந்தனைகள்!
தற்போது புராணங்கள் மற்றும் இதிகாசங்களை திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. ஏற்கனவே பாகுபலி, மணிகர்ணிகா, பத்மாவதி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஆர்ஆர், மரைக்கார் அரபிக்கடலின் சிங்கம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது ராமாயணக் கதையை சீதையின் கோணத்தில் இருந்து விவரிக்குமாறு புதிய வரலாற்றுப் படம் ஒன்று உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க இருக்கிறாராம். ஆனால் கரீனா இந்தப் படத்தில் நடிப்பதற்கு இரண்டாம் நிபந்தனைகள் வைத்துள்ளாராம்.
முதலாவது, தான் தற்போது நடித்து வரும் படங்களை முடித்த பின்னர் தான் சீதா படத்தில் இணைவது. இரண்டாவது அவருக்கு சம்பளமாக 12 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமாம்.
பொதுவாக, கரீனா படங்களில் நடிக்க 6 முதல் 8 கோடி வரை வாங்குவார். ஆனால் சீதாவாக நடிக்க அதிகம் உழைக்கவேண்டும் என்பதால் இவ்வளவு தொகை கேட்டுள்ளாராம். தயாரிப்பாளர்களும் அவரின் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சீதா படத்தின் கதையை இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். அலுக்கிக் தேசாய் இந்த படத்தை இயக்குகிறார்.