பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார்!

birju-maharaj-3

பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு நேற்று இரவு காலமானார்.  அவருக்கு வயது 83.

இந்தியாவின் மிகப்பெரும் நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜு  திரைத்துறையிலும் பிரபல இருந்து வந்தார். விஸ்வரூபம் திரைப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் கதக் நடனத்தை பிர்ஜு மகாராஜ்ஜிடம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தப் படத்தில் 'உன்னை காணாது' பாடலுக்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது பிர்ஜு மகாராஜூக்கு கிடைத்தது. அதேபோல் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்திற்காகவும் அவர் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Birju

இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவருக்கு அடிக்கடி டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்திவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. பின்னர் அவர் காலமானதாகக் கூறப்படுகிறது. 

அவரது மறைவு இந்தியத் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Share this story