நேரடியாக 100 நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய கத்ரீனா கைஃப்!

நேரடியாக 100 நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய கத்ரீனா கைஃப்!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 100 பின்னணி நடன கலைஞர்களுக்கு பணம் வழங்கி உதவி செய்துள்ளார்.
கொரோனாவின் கோரத் தாண்ட பிடியில் சிக்கிய இந்த உலகமே தத்தளித்து வருகிறது. கொரோனாவின் கொடூரத்திற்கு இரையாகிய முக்கிய துறைகளில் திரைத்துறையும் ஒன்று. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சினிமாத்துறை முடங்கியுள்ளது. அதனால் சினிமா தொழிலாளர்களும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்த சினிமா பிரபலங்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த வகையில் உதவி செய்து கொள்கின்றனர்.

அந்தவகையில், தற்போது நடிகை கத்ரீனா கைஃப் 100 பின்னணி நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி உள்ளார். இந்தப் பணத்தின் மூலம் ஊரடங்கு முடியும் வரை அவர்கள் ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
கத்ரினாவிடம் பண உதவி பெற்றுக்கொண்ட சில நடன கலைஞர்கள் சொந்தமாக சிறுதொழில்கள் பலவற்றை ஆரம்பித்துள்ளதாகவும் உதவி பெற்றவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். கத்ரினா செய்த இந்த உதவி பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share this story