சுஷாந்த் வழக்கில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய நபர்கள்… பிரார்த்தனை தான் காரணம் என்று கூறும் சகோதரி!

சுஷாந்த் வழக்கில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய நபர்கள்… பிரார்த்தனை தான் காரணம் என்று கூறும் சகோதரி!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கைது செய்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் குடும்பத்தினர் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில், ரியா, ஷோயிக் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சுஷாந்தின் தற்கொலைக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.
சுஷாந்த் வழக்கில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய நபர்கள்… பிரார்த்தனை தான் காரணம் என்று கூறும் சகோதரி!
நடந்து வரும் விசாரணையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை (என்சிபி) மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளதாக ஸ்வேதா பாராட்டினார். என்சிபி,  சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தியின் சகோதரரான ஷோயிக் சக்ரவர்த்தியின் குடியிருப்பு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. சோதனைக்குப் பிறகு, சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவையும் கைது செய்தனர்.
Shweta on losing brother Sushant Singh Rajput: My heart bleeds every day | Entertainment News,The Indian Express
தற்போது ஸ்வேதா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் “பிரார்த்தனையின் சக்தியை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “பிரார்த்தனை செய்யுங்கள் … இது வேலை செய்கிறது! எங்கள் அனைவரையும் உண்மையின் திசையில் வழிநடத்துங்கள்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Keep Praying…It works! #GodIsWithUs #JusticeForSushantSinghRajput #Warriors4SRR #GlobalPrayers4SSR

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

Share this story