டாக்ஸிக் படத்தில் நெருக்கமாக நடித்தது பற்றி கியாரா அத்வானி என்ன சொல்கிறார் தெரியுமா ?
சமீபத்தில் வெளியான டாக்ஸிக் படத்தில் நடிகர் யஷ்ஷுடன் நடிகை கியாரா அத்வானி மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் காபிவித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கியாரா அத்வானி, டாக்ஸிக் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கியாரா, ‘‘சித்தார்த் அதை ஒரு விஷயமாகவே எடுத்து கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் இதை பற்றி பேசியதில்லை.
நாங்களும் இதை பற்றி பேசியதே இல்லை. இந்த படத்தை பொறுத்தவரை, நாங்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. படம் நல்ல தொடக்கத்தை பெற்றும், எதிர்பார்த்தபடி அமையாமல் போனது. அப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் என்னை மிகவும் மனச்சோர்வடைய செய்தன. படம் வெளியான முதல் வார இறுதியில் கிடைத்த எதிர்வினையை கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அதே சமயம் நிறைய பாராட்டுக்களும் கிடைத்தன. எனது வழக்கமான பாணியிலிருந்து வெளியே வந்து, அந்த கதாபாத்திரத்தில் நடித்ததை பலரும் பாராட்டினர்.

